இலங்கை பெண்ணின் டிக் டொக் காணொளியால் சர்ச்சை….!

இலங்கை பெண் ஒருவர் இராணுவ சீருடைக்கு சமமான துணியில் தைக்கப்பட்ட ஆடை அணிந்து வெளியிட்ட டிக்டொக் காணொளி ஒன்றினால் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.இலங்கை பாதுகாப்பு பிரிவினரின் சீருடைகளை சிவில் மக்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான சீருடைகளை அணிய வேண்டும் என்றால் அல்லது நிர்மாணிக்க வேண்டும் என்றால் விசேட அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆயுதப்படையினருக்கான ஆடைகளை உற்பத்தி செய்வதற்கு உரிமம் பெற்ற பல ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இருப்பதாகவும் அவை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண் சர்ச்சைக்குரிய காணொளி வெளியிட்டமை குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டம் உள்ளதெனவும், இவ்வாறான டிக் டொக் காணொளிகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleமனைவி மற்றும் மாமியாரை வாளால் வெட்டிய நபர்….!
Next articleகளு கங்கையில் இருவர் நீரில் மூழ்கினர். 10வயது சிறுவனை காணவில்லை!