இலங்கையில் வீடு இல்லாதவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்….!

இலங்கையில் வீடின்றி வாழும் மக்களுக்கு அதற்கான தீர்வினை வழங்குவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

கொலன்னாவை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அதிகார சபையின் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

உங்களுக்கு வீடு, நாட்டிற்கு நாளை எனும் வேலைத்திட்டத்தின் கீழ், கொலன்னாவை பகுதியில், அடிகல் நாட்டப்பட்டு 43 நாட்களில் உரியவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இதே போன்று பெரும்பாலானவர்கள் வீடுகளின்றி உள்ளனர். வீடமைப்பு திட்டம் ஒன்றை ஏற்படுத்தி, அவர்களுக்கான வீடுகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Previous articleகொழும்பில் இடிந்து விழுந்த இரு மாடிக் கட்டிடம்
Next articleபூமியை நெருங்கும் சிறுகோள் – நாசா தகவல்