பூமியை நெருங்கும் சிறுகோள் – நாசா தகவல்

எதிர்வரும் 18 ஆம் திகதி சூரிய மண்டலத்தினை சுற்றிவரும் சிறிய கோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் வர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

1994 இல் அவுஸ்திரேலிய விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு 7482 என்று அழைக்கப்படும் இந்த சிறிய கோள் பூமியிலிருந்து 20 இலட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஒட்டி செல்லவுள்ளது.

இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தொலைவைவிட ஐந்து மடங்கு அதிகமாகும்.

இந்த சிறிய கோளானது மணிக்கு 47 ஆயிரத்து 344 கிலோமீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

7482 என்று அழைக்கப்படும் குறித்த சிறு கோளானது சுமார் 3,300 அடி உயரம் கொண்டதாக இருப்பதாகவும் இதனால் பூமிக்கு ஆபத்து குறைவாகவே காணப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.