திருகோணமலை கடற்படை முகாமில் சிப்பாய் ஒருவரின் விபரீத முடிவு….!

திருகோணமலை தலைமையக கடற்படை முகாமில் தூக்கில் தொங்கிய நிலையில் சிப்பாய் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை குறித்த சிப்பாய் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட கடற்படை சிப்பாய் நவ வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த என்.எம்.கே.எஸ்.நவரத்ன (26) என கூறப்படுகின்றது.

எனினும் குறித்த கடற்படை சிப்பாய் உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. இந்நிலையில் கடற்படை முகாம் வைத்தியசாலையிலிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக சடலம் கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇன்றைய ராசிபலன் 20/01/2022
Next articleநடு வீதியில் அங்கிகளை தீயில் போட்டு எரித்த தேரர்!