யாழில் நீதவானால் எச்சரிக்கப்பட்ட பிரபல பாடசாலை மாணவர்கள்!

யாழ்.சாவகச்சோியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் குழுவாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.

குறித்த வழக்கு சாவகச்சேரி நீதவான் யூட்சன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேகநபர்களான மூன்று மாணவர்களும் நீதவானால் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர்.

அத்துடன் பாடசாலை நாட்களில் கல்வியில் கவனம் செலுத்தும் படியும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்தும்படியும் மேலும் குற்றச்செயலில் ஈடுபட்டால் நீதிமன்ற தண்டனைகளை பெறவேண்டிவரும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

அத்துடன் பெற்றோர் முன்னிலையில் குறித்த மாணவர்களுக்கு நீதவான் அறிவுரைகளையும் கூறியிருந்ததுடன், மூவரையும் தலா 75000 பெறுமதியான ஆள்பிணையில் செல்ல அனுமதித்தார்.

மேலும் குறித்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 30ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

Previous articleநடு வீதியில் அங்கிகளை தீயில் போட்டு எரித்த தேரர்!
Next articleவவுனியாவில் பாரிய சத்தத்துடன் தீப்பற்றி எரியும் மதுபானசாலை! போராடும் தீயணைப்பு பிரிவினர்…!