மதுவை குளிர்பானம் என ஏமாற்றி குடிக்க வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை : நேர்ந்த விபரீதம்!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஏகே குச்சிப்பாளையம் ஊரைச் சேர்ந்த தனியார் கோச்சிங் சென்டரில் நர்சிங் படிக்கும் மாணவி கடந்த 12ஆம் தேதி அன்று பண்ருட்டி ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்,

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த மாணவியை பார்த்த அப்பகுதியில் உள்ள பொது மக்கள் உடனடியாக மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் இதில் காயங்களுடன் மாணிவ உயிர் தப்பினார்.

தகவலறிந்து பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது, குடும்பத்தில் சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாகவும்,

இதன் காரணமாக மாணவியின் அண்ணன் திட்டியதால் தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்பட்டது. ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் தற்கொலை முயற்சிக்கான உண்மையான காரணம் தெரிய வந்தது. விசாரணையில்,

கடந்த மாதம் மூன்றாம் தேதி மருத்துவ பயிற்சிக்காக சென்ற இடத்தில் கல்லூரி பொறுப்பாளர் பர்க்கத்பீவி, தனியார் மருத்துவமனை பயிற்சியாளர் அன்பழகன் கல்லூரி தாளாளர் டேவிட்அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோர் குளிர்பானம் என்று கூறி மது அருந்த வைத்து பாலியல் தொந்தரவு செய்ததாக மாணவி கூறினார்.

இதுகுறித்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஜனவரி 13 அன்று பர்க்கத்பீவி மற்றும் அன்பழகன் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்த நிலையில், தப்பி ஓடிய டேவிட் அசோக்குமார் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Previous articleதிருகோணமலையில் மீண்டும் அதிகரித்துவரும் கோவிட் : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!
Next articleபேராசிரியர் என்று பொய் சொல்லி திருமணம் செய்த ஆய்வக உதவியாளர் : விரக்தியடைந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!