கிழக்கின் முக்கிய பல்கலைக்கழகத்தில் மாணவியிடம் விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கேட்டுள்ளார்….!

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவரிடம் விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரியமைக்கான கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அரபுமொழி மற்றும் இஸ்லாமிய கற்கை பீடத்தைச் சேர்ந்த முதலாம் வருட மாணவியிடம் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாலியல் லஞ்சம் கோரிய விடயம் பெரிதும் பரபரப்பாகப் பேசப்படுகின்றது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவி தனது பல்கலைக்கழக கற்கையை இடைநிறுத்தும் நோக்கோடு பல்கலைக்கழக விடுதியில் இருந்தும் வெளியேறியுள்ளதுடன் இது தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கும் அறியப்படுத்தியுள்ளார்.

குறித்த மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை உறிதிப்படுத்தும் படியாக விரிவுரையாளர் மாணவியோடு பேசிய குரல் பதிவுகள் சம்பவம் தொடர்பான முக்கியமான ஆதாரங்களாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போதும் அவை வெளிவருவதென்பது அரிதாகவே உள்ளது.

அவ்வாறு வெளிவருகின்ற போதும் போதிய ஆதாரங்கள் இன்மையின் காரணமாக உரிய முறையில் நீதியினைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை. இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் ரூடவ்டுபடுபவர்கள் தொடர்ந்தும் தப்பித்துக் கொண்டே உள்ளதோடு அச்சமின்றியும் செயற்படுகின்றனர்.இந்நிலைமை தொடர்வதனால் பெண் பிள்ளைகளை பல்கலைக்கழகம் அனுப்ப பெற்றோர்கள் விருப்பப்படாததோடு பிள்ளைகளும் அச்சம் கொள்கின்றனர் இதனால் பெண்களின் பல்கலைக்கழக கல்விக்கான பாரிய சவாலான நிலமை காணப்படுகின்றது.

இவ்வாறாக பல்கலைக்கழகங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைகள் நிறுத்தப்பட வேண்டும்ரூபவ் இனிவரும் காலங்களில் இவ்வாறான முறையற்ற செயற்பாடு நடைபெறாத வண்ணம் இறுக்கமான வழிமுறைகள் பல்கலைக்கழகங்களில் பின்பற்றவும், குறித்த மாணவிக்கு நடந்த அநீதிக்கான உடனடித் தீர்வினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.இவ்வாறான பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கிழக்குப் பல்கலைகழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியமானது வன்மையாகக் கண்டிக்கின்றது.