கனடாவில் பொலிஸாரால் தேடப்படும் தமிழ் இளைஞர் : பொது மக்களிடம் கோரிக்கை!!


கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொரோண்டோ பொலிஸார் இதனை கூறியுள்ளனர். குறித்த இளைஞர் இறுதியா ஜனவரி 15, 2022 அன்று மதியம் 12:10 மணியளவில் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் ட்ரெத்வீ டிரைவ் பகுதியில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்டையான கருப்பு முடி, தாடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் அவர் காணப்படுகிறார். அவர் கருப்பு நிற குளிர்கால ஜாக்கெட் அணிந்திருந்தார். அவர் கடைசியாக சிவப்பு நிற CFMK 918 என்ற உரிமத் தகடு கொண்ட சாம்பல் நிற டொயோட்டா கேம்ரியை ஓட்டிச் சென்றுள்ளார்.

குறித்த இளைஞர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முறைகள் ஊடாக தொடர்புகொண்டு தகவல் வழங்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous articleமுல்லைத்தீவு பகுதியில் 27 வயது யுவதி தவறான முடிவால் மரணம்; கதறும் நண்பர்கள்!!
Next articleதாயை ஏமாற்றி 14 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற மகன்!!