தகாத உறவு; வெட்டிய தலையுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண்ணால் பரபரப்பு!

மனைவி தனது கணவனின் தலையை வெட்டி பையில் வைத்து காவல் நிலையம் கொண்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனின் தகாத உறவு விவகாரம் தொடர்பில் எழுந்த பிரச்னையில் மனைவி கணவரின் தலையை வெட்டியதாக கூறப்படுகின்றது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இந்தியாவின் ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்தவர் ரவிசந்த்சூரி (55), வசுந்தரா, (45) தம்பதியினருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தம்பதிகளுக்கு மனநிலை சரியில்லாத மகன் ஒருவர் இருக்கிறார்.

இந்நிலையில் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருப்பது பற்றி அறிந்த மனைவி, அது குறித்து கண்டித்ததனால் 2 பேருக்கும் இடையே அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் கள்ளத்தொடர்பு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தான் என்ன செய்கிறோம் என்பது கூட அறியாத மனநிலைக்கு சென்றார் வசுந்தரா. கணவனை பலமாக தாக்கி கத்தியால் அவருடைய கழுத்தில் வெட்டி கொலை செய்தார்.

அதன்பின்னர் கணவனின் தலையை பையில் போட்டு கொண்டு ரேணிகுண்டா காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். கணவனின் தலையுடன் மனைவி நடந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார் வசுந்தராவிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, கணவனின் தகாத உறவு காரணமாக கணவனை கொலை செய்ததாக அப்பெண் கூறினார். இதனையடுத்து வசுந்தரா மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.

Previous articleமகனை தேடியலைந்த மற்றுமொரு தாயார் உயிரிழப்பு; தமிழர்கள் மத்தியில் தொடரும் சோகம்…..!
Next articleஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடனம் ஆடுவது போன்றதான காணொளி போலியானது…..! வெளியான அறிக்கை…!