யாழில் மீனவர்கள் இருவர் மாயம்!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள் கரை திரும்பவில்லையென உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் நேற்று மதியம் மீன்பிடிக்க சென்ற நிலையில் , இன்று அதிகாலை கரை திரும்பியிருக்க வேண்டும். எனினும், அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என கூறப்படுகின்றது.

சம்பவத்தில் வல்வெட்டித்துறை மீனாட்சியம்மன் கோயிலடியை சேர்ந்த சுந்தரலிங்கம் கங்காரூபன் (38), தவராசா சுதர்சன் (41) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

Previous articleகிளிநொச்சியில் நள்ளிரவில் தீயில் கருகி உயிரிழந்த தாய் மற்றும் மகள்….!
Next articleஇளைஞன் ஒருவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல்!