நாட்டில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு?

நாட்டில் நாளாந்தம் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கான அமெரிக்க டொலர், எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் கடனாக வழங்கப்படாவிட்டால், இந்த நிலை ஏற்படுமெனவும் அவர் கூறினார்.

நாட்டில் போதுமான அமெரிக்க டொலர்கள் இருப்பதாகவும், அரசாங்கத்துக்கு நெருக்கடியான பிரச்சினை எதுவும் இல்லை எனவும் பொதுமக்களிடம் கூறினால், மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு தூண்டப்படமாட்டார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த பிரச்சினையை சமாளிக்க அனைத்து குடிமக்களும் தியாகங்களை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Previous articleயாழில் இன்றுகாலை இடம்பெற்ற சம்பவம்; அதிஸ்டவசமாக தப்பிய நபர்!
Next articleமின்வெட்ட்டினால் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!