கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்…..!

குடும்பஸ்தர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை, சூரியவெவ பிரதேசத்தில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது எனச் சூரியவெவப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முவன்பெலஸ்ஸ, சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 62 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தலையில் பலத்த காயங்கள் ஏற்படடே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். கடன் விவகாரமே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

படுகொலையுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Previous articleகளுத்துறை பகுதியில் வெடிபொருட்களுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்!
Next articleமலையகத்தில் கடும் குளிர்! ஒருவர் மரணம்