வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்…!வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது.

வவுனியா, இலுப்பையடிப் பகுதியிலுள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது.

வவுனியா நகரின் இலுப்பையடிப் பகுதியிலுள்ள வர்த்தகர்கள், முச்சக்கர வண்டி சாரதிகள், அப் பகுதியால் பயணத்தில் ஈடுபடும் மக்கள் என பலராலும் வழிபடப்பட்டு வந்த பிள்ளையார் சிலையே மாயமாகியுள்ளது.

இனந்தெரியாத நபர்கள் குறித்த சிலையை அங்கிருந்து அகற்றியுள்ளதுடன், சிலை இருந்த இடம் வெறுமையாக காட்சியளிக்கின்றது

Previous articleசுவிஸ் நாட்டில் திரைப்படதுறையில் விருது பெற்ற ஈழத்து தமிழன்…!
Next articleபுத்தளத்தில் நேருக்கு நேர் மோதிய வாகங்கள்: இளைஞருக்கு நேர்ந்த சோகம்!