யாழில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் பலி….!

சாவகச்சேரியில் புகையிரதம் மோதி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி இந்து கல்லூரி முன்பாக இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது கொழும்பில் இருந்து யாழ் வந்த உத்தரதேவி புகையிரதம் மாணவனை மோதியது.

வீர சிங்கம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 18 வயதான பானுஜன் மாணவனே உயிரிழந்துள்ளார் மந்துவில் பகுதியை சேர்ந்த மாணவனே உயிரிழந்தார் சடலம் தற்போது சாவகச்சரி வைத்தியசாலையில் வைக்க பட்டுஉள்ளது

வீரசிங்கம் மத்திய கல்லூரியில் நாளை இடம்பெறவுள்ள நிகழ்வொன்றிற்காக உடை தைத்து கொண்டு சென்றதாகவும் புகையிரத தண்டவாளத்தை கடந்தபோது விபத்துக்குள்ளாகிநார் என அங்குள்ளோர் தெரிவித்தனர்

Previous articleவவுனியாவின் உயர்கல்வி கல்வி வளங்களில் ஒன்று அழிவின் விளிம்பில்!!
Next articleசத்தமில்லாமல் திருமணத்தை முடித்த மீராமிதுன்…!