யாழில் C.T.B பஸ் மீது கல்வீச்சு…!யாழ்.நுணாவில் பகுதியில் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று மாலை நுணாவில் – கனகம்புளியடி வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற பேருந்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

சைக்கிளில் வந்த இளைஞர் ஒருவரே தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச் சென்றதாக தொிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Previous articleயாழில் மணல் கடத்தல் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கிசூடு …!
Next articleவவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் : பொலிஸார் குவிப்பு….!