தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை உயிரினம்….!தென்னிலங்கையில் வெள்ளை நிறத்தினாலான அரியவகை அணில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் வஸ்கடுவ – சமுத்திரராமய விகாரைக்கு அருகில் வசிக்கும் தாரக தயான் என்பவரின் வீட்டிற்கே குறித்த அரியவகை அணில் நேற்று வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

வெள்ளை நிற உடலையும், சிவந்த கண்களையும் கொண்ட இந்த அணில் கூண்டில் அடைக்கப்பட்டுள்ளதுடன், பிரதேசவாசிகளால் தேசிய மிருகக்காட்சிசாலைக்கும், களுத்துறை வடக்கு பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

மேலும், இந்த அணிலை அதிசயம் என்று கூறுவதுடன், பெருமளவானோர் வருகைத்தந்து பார்வையிட்டுள்ளனர்.

சுமார் ஒரு அடி நீளமுள்ள இந்த அணில் தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleஇலங்கை அணியில் மலிங்காவிற்கு முக்கிய பதவி….!
Next articleவவுனியா பல்கலைக்கழகம் மற்றும் கல்வியற்கல்லூரி மாணவர்கள் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!