இலங்கைக்கு 500 மில்லியன் வழங்க இந்தியா அனுமதி!

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க இந்தியா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி இந்த நிதி விரைவில் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் எனவும் கூறப்படுகின்றது. நாட்டில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்காக இந்த கடனுதவியை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை , எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து நேரடியாக மின்சாரத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleயாழில் இராணுவத்தினரை படம் பிடித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!
Next articleயானையிடம் போராடி தன் மகளின் உயரை காப்பாற்றிய தாய்!!