கத்தாரில் இலங்கையர் சுட்டுக் கொலை!

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் இருந்த இலங்கைப் பாதுகாவலர் ஒருவர் இளைஞரின் அடையாள அட்டையைக் கோரியதாகக் கூறி சுட்டுக் கொல்லப்பட்டதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் புதன்கிழமை (26-01-2022) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைவதற்கு இளைஞர் ஒருவர் அடையாள அட்டையை கோரியமை தொடர்பில் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு திரும்பிய இளைஞர் காவலாளி மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொலை செய்யப்பட்டவர் இலங்கையர் என்பது பின்னர் தெரியவந்ததுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மற்றொரு நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை கத்தார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.