கொழும்பில் தீவிரமடையும் தொற்று – மூடப்படும் வகுப்பறைகள்….!


கொழும்பின் பிரதான 10 பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் அந்த வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெதிவித்துள்ளார்.

மேலும் பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிக நாடு முழுவதும் பல பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதார அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு உரிய வேலைத்திட்டங்கள் இல்லாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

Previous articleபூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு அபராதம்?
Next articleஇலங்கையில் பெயர் மாற்றப்பட்ட முக்கிய நகரம்?