ஏழு மாடி கட்டடத்தில் இருந்து விழுந்த சிறுவன்; நேர்ந்த சோகம்….!

கொழும்பு – பம்பலப்பிட்டியில் ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து 15 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பம்பலப்பிட்டி, க்ரஸ்டர் பிளேஸில் அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை குறித்த சிறுவன் தவறி விழுந்துள்ளார்.

இதில், படுகாயமடைந்த சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleகொத்மலை பூனாஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Next articleஇன்றும் நாளையும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் விசேட நடைமுறை பரீட்சை….!