இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பாதிப்பு…..!

கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

தற்போது வைத்தியசாலையில் 55 சிறுவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களில் டெங்கு நோயினாலும் பாதிக்கப்பட்ட 20 சிறுவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவர்களில் யாருக்காவது மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அவர்களுக்கு முழுமையான இரத்த பரிசோதனை செய்யப்படும். மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், அது டெங்கு மற்றும் கொரோனா தொற்றாக இருக்கலாம்.

டெங்கு தொற்று தீவிரமாகினால் சிறுவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படலாம். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அது பாரதூரமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleகணனியில் விளையாடித்திரியும் அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்….!
Next articleஇந்திய அணியிலிருந்து காணாமல் போன தமிழகத்தின் யார்க்கர் மன்னன்..என்ன காரணம்?