இந்திய அணியிலிருந்து காணாமல் போன தமிழகத்தின் யார்க்கர் மன்னன்..என்ன காரணம்?

இந்திய அணையில் கடந்த சில காலமாக அரசியல் தாக்கங்கள் அதிகளவில் உள்ளதாக கருதப்படுகிறது.

தற்போதைய காலத்தில் இந்திய அணியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இடம்பெற்று வருகின்றனர். அந்த வகையில் தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம்பெறுவது அரிதிலும் அரிதான ஒன்று. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் முதல் அஸ்வின் வரை இன்றுவரை தமிழக வீரர்கள் இடம் பெறுவது என்பது அரிதாகவே இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் நடராஜன் அவர்கள் தனது திறமையை இந்திய அணியில் நிரூபித்தபோதும், அவருக்கு அணையில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

நடராஜனுக்கு இந்திய அணியின் வாய்ப்புகள் மறுக்கப்பட காரணமாக பேசப்படுவது அவருடைய பிட்னஸ். நடராஜன் ஒரு போட்டியில் விளையாடினால் அடுத்த போட்டியில் காயம் காரணமாக விளையாடுவது இல்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இருப்பினும் தற்போது தனது உடற்தகுதியை அவர் நிரூபித்தபோதும் அணியில் வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்கு பின்னணியில் அரசியல் இருப்பதாக கூறப்படுகிறது.

Previous articleஇலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றொரு பாதிப்பு…..!
Next articleஅவுஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த நபர் மகன் மற்றும் மகளை கொலை செய்த பின்னர் தற்கொலை செய்து கொண்டார்….!