பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த தலைமையாசிரியர் : வெளியான வைரல் வீடியோ!!

இதுதொடர்பான வீடியோவொன்று சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலதரப்பிலிருந்தும் இதுகுறித்த புகார்கள் எழுந்துவந்தன. சம்பந்தப்பட்ட கிராம மக்களும், பள்ளியின் பிற மாணவர்களும் தலைமை ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதாகவும், அதனடிப்படையில் அவர் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வீடியோவை, பள்ளியை சேர்ந்த பிற மாணவர்கள் தங்களின் மொபைலில் ஜன்னல் வழியாக பதிவு செய்திருக்கின்றனர்.

வீடியோ எடுப்பது அறிந்த பின், சம்பந்தப்பட்ட மாணவி மறைந்துக்கொள்ள முயல்கிறார். அதேநேரம் அந்த தலைமை ஆசிரியர் ஜன்னலை நோக்கி வருகின்றார்.

வீடியோவை ஆதாரமாக வைத்து தலைமை ஆசிரியருக்கு எதிரான வழக்கு, கர்நாடகாவின் ஹெச்.டி. கோட் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து தலைமையாசிரியர் காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார் என்றும், கஸ்டடி எடுக்கப்பட்டு அவர் விசாரிக்கப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous articleஅப்பா கல் குவாரியில் கூலி வேலை.. அரசுப் பள்ளியில் படித்து டாக்டர் ஆகிறார் ஏழை மாணவி!!
Next articleநீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த இளம் தமிழ் யுவதிகள் …..!