சில காலத்தில் இலங்கை தீவு முழுவதும் ஒமிக்ரோன் தொற்று பரவும் அபாயம்…..!

கோவிட் தொற்றானது சில நாட்களுக்கு முன்னரே சமூகமயப்படுத்தப்பட்டு தற்போது சுனாமியாக பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பரவி வரும் ஒமிக்ரோன் மாறுபாடு சில வழிகளில் சென்று பின்வாங்கும் என்று நம்பப்படுகிறது, ஆனால் இது எப்படி நடக்கிறது என்பதை பார்க்க நாங்கள் காத்திருக்க நேரிட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற போதிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றவர்களில் அதிகமானவர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் வைரஸ் தற்போது பெரும்பாலும் அறிகுறியற்றதாக இருப்பதால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பரிசோதனை செய்துக் கொள்ளாமல் சமூகம் முழுவதும் நோயை பரப்புவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous articleநீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த இளம் தமிழ் யுவதிகள் …..!
Next articleநாடு மீண்டும் முடக்கப்படுமா? வெளியான தகவல்….!