இலங்கையை சேர்ந்த தொழிலாளி கத்தாரில் சுட்டுக்கொல்லப்பட்டார்….!கத்தார் நாட்டின் தோஹாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த நபர் இலங்கையை சேர்ந்த தொழிலாளி அல்ல என உறுதியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் சில ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து துறைக்கு பொறுப்பான ராஜாங்க அமைச்சர் பிரியங்கர பெரேரா விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன் இது தொடர்பான உடனடியாக தேடி அறியுமாறு கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவு அறிவித்துள்ளார்.

இதற்கமைய கத்தாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் பிரதானி கீர்த்தி முத்துகுமாரண, சம்பவம் நடத்த பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்துள்ளார்.

சம்பவத்தில் இறந்து இலங்கையர் அல்ல என்பது பொலிஸார் வழங்கிய தகவல் மூலம் உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பிரதேச வைத்தியசாலையில் ஆய்வு நடத்தப்பட்டதுடன் அங்கிருந்த உடல் இலங்கையை சேர்ந்தவருடையது அல்ல என்பது உறுதியாகியுள்ளது. 

Previous articleபல கோடி ரூபா பெறுமதியான 2 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றிய பொலிஸார்….!
Next articleமரம் வெட்டும் இயந்திரத்தால் இரு கால்களையும் வெட்டிய நபர்; அதிர வைக்கும் பின்னணி!