உயர்தர பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையம் ஏற்பாடு….!

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாகவும், தொற்றாளர்களுடன் நெருங்கியவர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ள கல்முனை பிரதேச உயர்தர பரீட்சார்த்திகளுக்கு தனியாக விசேட பரீட்சை மத்திய நிலையமொன்று நிறுவப்பட்டுள்ளதாக கல்முனை பிரதேச சுகதார சேவைகள் பணிப்பாளர் ஐ.எல்.எம்.ரிபாஸ் தெரிவித்துள்ளார்.

வலய கல்வித் திணைக்கள பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

க.பொ.த. உயர்தர பரீட்சை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பாக “கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள மாணவர்கள் பாலமுனை ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளில் தங்க வைக்கப்பட்டு, அவர்கள் படிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் ஏனையோருடன் தொடர்புகளை பேணுவதற்கு முடியாது” என்றார். பரீட்சை மத்திய நிலையங்களில் வைத்து பரீட்சார்த்திகள் சுகயீனமுற்றால், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அம்புயலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாடு தழுவிய ரீதியில் கொரேனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை மத்திய நிலையகங்கள் நிருவப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கப்படுகிறது.