கணவரால் பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு நேர்ந்த நிலை….!


காலி – கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கணவனால் எரிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெண் பொலிஸ் அதிகாரிக்கும் அவரது கணவருக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, சம்பவத்தில் சிறு தீக்காயங்களுக்கு உள்ளான பெண் உத்தியோகத்தரின் மனைவி பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous articleஒன்ராறியோவில் கொட்டும் பனியில் தனித்துவிடப்பட்ட பள்ளி சிறுவன்! தாயார் வெளியிட்ட தகவல்….!
Next articleசுவிஸில் இருந்து யாழ் சென்றவர் சடலமாக மீட்பு….!