யாழில் இந்தியவின் 135 படகுகள் ஏலத்தில் விற்பனை…!யாழின் காரைநகரில் வைத்து 135 இந்திய படகுகள் நேற்று ஏலம் விடப்பட்டது.

அவை சுமார் 52 இலட்சத்துக்கும் அதிகமான விலையில் வீரப்பனை ஆனதாக கூறப்படுகிறது. இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் 135 படகுகள் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட படகுகள் ஏலத்தில் விடப்பட்டன. கொழும்பில் இருநது வந்தடைந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள் முன்னிலையில் நேற்று காலை 9 மணிக்கு ஆரம்பமான ஏலம் பிற்பகல் 2 மணி வரை இடம்பெற்றது.

இதன்போது 135 படகுகள் 52 இலட்சத்து 20 ஆயிரத்து 500 ரூபாவிற்கு ஏலம் போனது. இதில் ஒரு படகு அதிகபட்சமாக 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.  

Previous articleமைத்திரியின் புதிய அதிரடி அறிவிப்ப….!
Next articleநாட்டு மக்களுக்கு விசேட நிவாரண பொதி வழங்க ஏற்பாடு…..!