நாட்டு மக்களுக்கு விசேட நிவாரண பொதி வழங்க ஏற்பாடு…..!


லங்கா சதொச நிறுவனம் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய விசேட நிவாரண பொதி ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 998 ரூபாவுக்கு இந்த விசேட நிவாரண பொதி வழங்கப்படுகின்றது. வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர்  பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

குறித்த நிவாரண பொதியில், 400 கிராம் நூடில்ஸ், 100 கிராம் நெத்தலி கருவாடு, 5 கிலோகிராம் நாட்டரிசி, 100 கிராம் தேயிலை மற்றும் 100 கிராம் மஞ்சள் தூள் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ளாா்.

இதேவேள, நாட்டில் சதொச விற்பனை நிலையம் இல்லாத பிரதேசங்களிலுள்ள மக்கள் 1998 என்ற துரித இலக்கத்துக்கு அழைக்க முடியும் என்பதுடன், 48 மணி நேரத்தில் வீட்டுக்கே இந்த நிவாரண பொதி விநியோகிக்க முடியும் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். 

Previous articleயாழில் இந்தியவின் 135 படகுகள் ஏலத்தில் விற்பனை…!
Next articleயாழில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்!