திருமணம் செய்ய மறுத்த காதலன் : வேதனையில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!ராமநாதபுரம் அருகே காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் மேனகா (22). தந்தை உயிரிழந்த நிலையில், மேனகா தனது தாயாருடன் தனியே வசித்து வந்தார்.

இந்த நிலையில், சம்பவத்தன்று நள்ளிரவு தனது அறையில் தனியாக இருந்த மேனகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில், ராமநாதபுரம் போலீசார், மேனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், மேனகா, சடையன்வலசை பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவர் திருமணம் செய்ய மறுத்ததால் மேனகா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறிய உறவினர்கள்,

அந்த இளைஞரை கைதுசெய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அந்த இளைஞரை கைது செய்யும் வரை மேனகாவின் உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous articleமிக இளவயதில் பெருமைப்படுத்திய தமிழ் பெண்மணி!
Next articleஉன் மனைவி எனக்கு என் மனைவி உனக்கு… விபரீத கலாச்சாரம் : அதிர்ச்சி தகவல்!!