உன் மனைவி எனக்கு என் மனைவி உனக்கு… விபரீத கலாச்சாரம் : அதிர்ச்சி தகவல்!!



கேரளாவில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் ‘wife swappping’ என்ற க்ரூப் தொடங்கி அதில் தங்களது மனைவிகளை விரும்புவோருக்கு பங்குபோடும் கலாச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் கைதான சம்பவம் மாநிலத்தை அதிர செய்தது.
அண்மையில், கேரளா மாநிலம் கோட்டயம் அடுத்த கருகாச்சல் காவல் நிலையத்தில் பெண் அளித்த புகாரில், எனது கணவர் தன்னை வேறொரு ஆணுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாகவும், இயற்கைக்கு மாறாக உடலுறவு வைத்து துன்புறுத்தியதாகவும் அதில் கூறியிருந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பெண்ணின் கணவர் உட்பட 7 பேர் தங்களது மனைவிகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு உடலுறவில் ஈடுபட்டு வந்ததையும், அதன் மூலம் பணம் சம்பாதித்து வந்ததையும் கேட்டறிந்து அதிர்ந்தனர்.
அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் என 7 பேரை கைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில், மனைவிகளை மாற்றிக்கொள்ளும் கலாச்சாரத்தில் இவர்களுடன் சேர்ந்து சுமார் 1,000 தம்பதிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெங்களூருவில் ஒரு தம்பதி வாட்சப், டெலிகிராம் போன்ற செயலிகளில் ‘couple swap’ குரூப் தொடங்கி அதில் பலரையும் இந்த கலாச்சாரத்துக்கு இழுத்துள்ள சம்பவம் போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


பெங்களூரூவைச் சேர்ந்த வினய் என்பவர் காதல் திருமணம் செய்து மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவன் மனைவி இருவரும் சேர்ந்துதான் மனைவிகளை மாற்றிக்கொள்ளும் விவகாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

அதற்காக ஒரு க்ரூப்பை தொடங்கி, மனைவியை வேறொருவரின் உல்லாசத்துக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருப்பவர்களை மட்டும் அந்த க்ரூபில் சேர்த்துள்ளனர். க்ரூப்பில் சேரும் நபர் அதற்கு முன்பே தனது மனைவியுடன் புகைப்படம் எடுத்து வினய்க்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் சரிபார்த்த பின்னர்தான் க்ரூப்பில் சேர்ப்பார்களாம். இவ்வாறு க்ரூப்பில் இணைந்த பின்னர் குழுவில் இருப்பவர்களின் மனைவிகளை அவரவர்கள் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து உல்லாசம் காணலாம்
ஆனால், அதே சமயம் மற்றொருவரின் மனைவியுடன் ஒப்பந்தம் ஆகும் நேரத்தில் அந்த நபரும் தனது மனைவியை அனுப்பி வைக்க வேண்டுமாம்… இதுதான் கப்புள் ஷேரிங்காம்… தற்போது பெங்களூரு தம்பதியை போலீசார் கைது செய்து மேற்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.