யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!

யாழ்ப்பாணம் – சுன்னாகம் மயிலனி பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஏழாலை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதன்படி கைது செய்யப்பட்டவரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழ் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!
Next articleகமல் பட நடிகர் ”பீம் பாய்” : மகாபாரத “பீமன்” காலமானார்…!