கமல் பட நடிகர் ”பீம் பாய்” : மகாபாரத “பீமன்” காலமானார்…!

தூர்தர்சனில் ஒளிபரப்பான மகாபாரத தொடரில் பீமனாக நடித்து பிரபலமான பிரவீன்குமார் சோப்த்தி மாரடைப்பு காரணமாக காலமானார்.

பஞ்சாப்பை சேர்ந்த அவருக்கு வயது 74. 6 அடி 6 அங்குலம் உயரம் கொண்ட பிரவீண்குமார், சிறந்த தடகள வீரராகவும் விளங்கினார். 1966 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வட்டு எறிதல், சம்மட்டி எறிதலில் 2 தங்கப் பதக்கம் உள்பட 5 பதக்கங்கள் வென்றவர்.

தமிழில் மைக்கேல் மதன காமராஜன் உள்பட 50 க்கும் மேற்பட்ட பல்வேறு மொழிப் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

Previous articleயாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!
Next articleமட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்…..!