கடவுள்களாக தெரிந்த தீயணைப்பு வீரர்கள்… தீ விபத்தில் தப்பிய ஸ்ரீயின் திக் திக் நிமிடங்கள்!சென்னை  உள்ள வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய அந்த தருணத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றி சின்னத்திரை நடிகர் ஸ்ரீ அச்சத்துடன் கூறியுள்ளார்.

திடீரென்று வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் பலருக்கும் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைத்து விடுகிறது என்று ஸ்ரீ உருக்கமாக கூறியிருக்கிறார்.

சென்னை பாண்டி பஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06-02-2022) நடந்த தீ விபத்தில் 80க்கும் மேற்பட்ட மக்கள் மாட்டிக்கொண்டனர். அந்த இடத்தில் சின்னத்திரை நடிகரான ஸ்ரீ மற்றும் அவருடைய அம்மாவும் இருந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை  என்பதால் இவர்கள் அங்கே பிராத்தனை செய்வதற்காக சென்றிருந்தார்களாம். அவர் சென்றிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மூன்றாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

தீ விபத்து நடந்து இருக்கிறது என்று புரிந்து கொண்டு இவர்கள் இருந்த இடத்தை விட்டு கிளம்புவதற்குள் அங்கே முழுவதுமாக கருப்பு புகையோடு சூழ்ந்துகொண்டதாகவும், வெளியே இருந்து மக்கள் எல்லாம் கற்களை தூக்கி எரிந்து கண்ணாடியை உடைத்து கொண்டிருந்தாக தெரிவித்தார்.

இதேவேளை, முதலில் இவர்களுக்கு எதற்காக கற்களை தூக்கி எறிகிறார்கள் என்று தெரியாமல் இருந்தாலும் பின்பு அவர்கள் கண்ணாடியை உடைத்த பிறகு தான் தீ வெளியே தெரிய ஆரம்பித்திருக்கிறது.

அப்போது வெளியே இருந்த மக்கள் இவர்களுக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார். நல்லவேளையாக அந்த நேரத்தில் தீயணைப்பு வண்டி வந்திருக்கிறது. வந்த முதல் வண்டியில் தண்ணீர் முடிந்து விடவே இவர்களுக்கு மேலும் பயம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் உடனே மற்ற மூன்று வண்டிகள் தொடர்ந்து வந்துள்ளது. அவர்கள தங்களுடைய பணியை நொடிப்பொழுதும் தாமதிக்காமல் செய்து கொண்டிருந்தார்களாம்

கடவுள்களால் நேரில் வர முடியாத நேரங்களில் அவர்கள் யாரேனும் உருவத்தில் வந்து உதவுவார்கள் என்பதில் தான் உறுதியான நம்பிக்கை வைத்திருப்பது போல, அந்த நேரத்தில் பல இன்னல்களை கடந்து உள்ளே வந்து அனைவரையும் காப்பாற்றிய அந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தான் இவர்களுடைய கண்களுக்கு தேவதையாகவும், கடவுளாகவும் தெரிந்ததாக கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் உள்ளே இருந்தவர்களுக்கு ஒன்றும் ஆகாமல் காப்பாற்றப்பட்டதாகவும், பெரிய செயல்தான் என்றும், வாழ்க்கையில் எந்த ஒரு தருணமும் நிரந்தரமில்லை என்பதை தனக்கு கண்முன்னே இந்த நிகழ்வு காட்டிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

Previous articleமட்டக்களப்பில் அதிபர் கொடூரமாக படுகொலை! வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்…..!
Next articleஎரிபொருள் விலைகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!