பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு: முக்கிய குற்றவாளி பலி…!


மொரட்டுவை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுவின் உறுப்பினரான துலான் சமீர சம்பத் என்றழைக்கப்படும் ‘அப்பா’ (abba)  உயிரிழந்துள்ளார்.

மொரட்டுவை, எகொட உயன பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கியிருந்த சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போதே நேற்று இரவு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பரஸ்பர துப்பாக்கி சூட்டில் பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்துள்ளார்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் டுபாயில் இருந்து செயல்படும் போதைப்பொருள் கடத்தல்காரர் “பாணந்துறை சலிந்து” என்பவரின் நெருங்கிய சகா ஆவார்.

Previous articleயாழில் மக்களை சரமாரியாக கடித்துக் குதறிய நாய்….!
Next articleபிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் கொரோனா உறுதி!