பிரித்தானிய இளவரசருக்கு மீண்டும் கொரோனா உறுதி!பிரித்தானிய இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது அலுவலகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை (11-02-2022) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இளவரசர் சாா்லஸுக்கு (Charles, Prince of Wales) கொரோனா ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதனால் அவா் தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

73 வயதாகும் சாா்லஸ், அரசி எலிசபெத்துக்கு (Queen Elizabeth II) அடுத்தபடியாக பிரித்தானிய அரசராகப் பொறுப்பேற்கும் நிலையில் உள்ளார். ஏற்கெனவே அவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Previous articleபொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு: முக்கிய குற்றவாளி பலி…!
Next articleஆண் குழந்தைக்கு ஆசைப்பட்டு மனைவியின் உச்சந்தலையில் ஆணி அடித்தக் கணவர்…..!