யாழில் போதைப்பொருள் வைத்திருந்தவரின் வீடொன்றை திடீரென சுற்றிவளைத்த பொலிஸார்: வசமாக சிக்கிய நபர்….!

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான குறித்த சந்தேகநபர் 100 மில்லிகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸார் திடீரென மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் இன்று 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 102 கிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கஞ்சாவுடன் மோட்டார்சைக்கிளில் பயணித்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவ புலனாய்வு பிரிவினரும், ஊர்காவற்துறை பொலிஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous articleதிடீரென முடங்கிய டிவிட்டர் கணக்குகள்! அதிர்ச்சியடைந்த பல கோடி பயனாளர்கள்
Next articleமாந்திரீக நம்பிக்கையால் காவு கொள்ளப்பட்ட சிறுவன்! பரிசோதனையில் வெளிவந்த தகவல்….!