யாழில் பயணிகள் முன்னிலையில் தனியார் போக்குவரத்து சாரதியின் மோசமான செயல்!

யாழில் பயணிகள் முன்னிலையில் இ.போ.ச சாரதியை தாக்க முயன்ற தனியார் போக்குவரத்து சாரதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு பருத்தித்துறை நோக்கிப் புறப்பட்ட 750 வழித்தட இ.போ.ச பேருந்தின் சாரதி மீதே அச்சுவேலி பேருந்து நிலையத்தில் வைத்து இந்த தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நோக்கிப் பயணித்த பயணிகளும், அச்சுவேலியில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணிக்கவிருந்த பயணிகளும் இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் அச்சுவேலி நகர்ப் பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திற்கு சென்றதை அடுத்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த நபர் அங்கிருந்து விலகிச் சென்றதாகவும் கூறப்படுகின்றது.

Previous articleயாழில் குடும்ப பெண்ணொருவருக்கு நேர்ந்த சோகம்….!
Next articleசலுகை விலையில் சீமெந்து ; கைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சு….!