அமைச்சர் ஒருவரின் நிலுவையிலுள்ள மின் கட்டணம் 1 கோடி 20 லட்சம் வெளியான திடுக்கிடும் தகவல்….!

இலங்கையின் அமைச்சர் ஒருவரின் வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொழும்பு – கிருலப்பனை சரணங்கர வீதியிலுள்ள அமைச்சரின் வீட்டின் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வீட்டின் மின்சாரக் கட்டணம் 1 கோடி 20 லட்சம் ரூபாவை எட்டியுள்ளது. இருந்தும் வீட்டின் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

பாதுகாவலர்களே வீட்டின் மின்சாரம் விநியோகத்துக்கு இடையூறாக இருந்தனர். இந்த நாட்டின் ஏழை மக்களின் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு முன்னர் இவ்வாறான அமைச்சர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Previous articleயாழ்.திருநெல்வேலியில் கை குண்டு மீட்பு; தீவிர கண்காணிப்பில் பொலிஸார்……!
Next articleபெற்ற குழந்தையை கடத்தியதால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தந்தை! மரணத்திற்கான காரணம் வெளியானது….!