நாம் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரவில்லை. அயனமோட்தான் கொண்டு வந்தோம்’ யாழில் நடந்த சுவாரஸ்யம்….!

நாம் ஐஸ் போதைப்பொருள் கொண்டு வரவில்லை. அயனமோட்தான் கொண்டு வந்தோம்’ என போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெல்லியடி நகருக்கு அண்மையில், பருத்தித்துறை வீதியில் வைத்து, 818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவடிருந்தனர்.

காங்கேசன்துறை அந்தோனிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 818 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டது. அதனை 50 இலட்சம் ரூபாவிற்கு நபரொருவரிற்கு விற்பனை செய்ய வந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நெல்லியடி பொலிசாரால் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்கள். நேற்று (18) மீண்டும் நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கைதானவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அயனமோட்டுடனேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து, கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் ஐஸ் போதைப்பொருள் என ஏமாற்றி விற்பனை செய்ய அயனமோட்டை எடுத்துச் சென்றார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

Previous articleவவுனியாவில் ஓட்டம் எடுத்த மைத்திரி! தடுமாறிய மெய்பாதுகாவலர்கள்…..!
Next articleசிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்ட இளைஞர்களுக்கு நேர்ந்த கொடூரம்! திடுக்கிடும் சம்பவம்….!