வவுனியாவில் பேரூந்துக்காக காத்திருந்த பெண் மீது மோதிய லொறி : பெண் பரிதாபமாக பலி!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (22.02.2022) காலை இடம்பெற்ற விபத்தில் 33 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில், கனகராயன்குளம் பகுதியில் பேருந்திற்காக காத்திருந்த தந்தையும் மகளும் அவ்வீதியால் வந்து கொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் ஏறமுற்பட்டுள்ளனர்.

இதன்போது வவுனியாவில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து குறித்த இருவரையும் மோதியுள்ளது.

விபத்தில் பேருந்திற்காக காத்திருந்த சிவசுப்பிரமணியம் சிந்துயா வயது 33 என்ற பெண் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாரவூர்த்தி அதிக வேகமாக வந்தநிலையில் வேகத்தை கட்டுப்படுத்த முடியால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என காவற்துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குழந்தை மரணம் : பெற்றோர் பொலிசில் முறைப்பாடு!!
Next articleஇலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரு மர்ம சுங்கப்பாதை!