யாழ். போதனா வைத்தியசாலையில் மயமான கொரோனா தொற்றாளர்…..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளார். கடந்த 16ஆம் திகதி காய்ச்சலினால் சாவகச்சோய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு ஆன்டிஜென் பரிசோதனை மூலம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். மறுநாள் 17ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று பார்த்தபோது எனது கணவரைக் காணவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அவரது கணவர் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் இன்று பகல் மூதாட்டியொருவரிற்கு நடந்த கொடூரம்….!
Next articleகடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்….!