கடலில் நீராடச் சென்ற இளைஞன் மாயம்….!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டப்பள்ளம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனது நண்பருடன் கடற்கரை பகுதிக்கு சென்ற இளைஞன் மது போதையில் கடலில் குளித்த போது நீரில் மூழ்கி காணாமல் போனதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயஸ்ரீயிடம் நிலைமைகளை கேட்டறிந்ததோடு காணாமல் போன இளைஞரை தேடும் பணிகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

Previous articleயாழ். போதனா வைத்தியசாலையில் மயமான கொரோனா தொற்றாளர்…..!
Next articleபதவி விலகும் ஜீவன் குமாரதுங்க; புதிய கட்சிக்கு தாவல்….!