மீண்டும் 120 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ள எரிபொருள் ஒன்றின் விலை


தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

டீசல் லீற்றர் ஒன்றிற்கான நட்டம் 120 ரூபாய் என்ற போதிலும் ஒரு லீற்றர் டீசல் 55 ரூபாவினால் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக அதிகரித்துள்ள எரிபொருள் விலைகள் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசலுக்கு ஏற்பட்ட நட்டத்தை மட்டுமே ஈடுசெய்யும்.

டீசலுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய லீற்றருக்கு 120 ரூபாவினால் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

40,000 மெட்ரிக் தொன் டீசலை இறக்குமதி செய்வதற்கு முன்னர் 32 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டன. எனினும் உலக எரிபொருள் விலையேற்றம் காரணமாக 51 மில்லியன் டொலர்களாக அது அதிகரித்துள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்திருந்தால் இந்த மாதம் 26 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டிருக்கும் என விஜேசிங்க தெரிவித்தார்.