மின்வெட்டு நேரங்கள் குறைப்பு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரண்டு மணித்தியால மின்வெட்டும் நாளை ஒரு மணித்தியால மின்வெட்டும் அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, A முதல் L வரையான பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை இரண்டு மணிநேரம் மின்சாரம் தடைப்படும். P முதல் W வரையிலான பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணி வரை இரண்டு மணி நேரம் மின் தடை ஏற்படும்.

மேலும் நாளை A முதல் L மற்றும் P முதல் W வரையிலான பகுதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு ஏற்படும் எனவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. .

Previous articleநாட்டில் கருத்தடைக்கு தேவையான மாத்திரைகள் தட்டுப்பாடு!
Next articleகாலி முகத்திடலில் அரசுக்கெதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர்!