பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்து உரையாற்ற போகும் ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அடுத்த வாரம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட உள்ளார்.

இதன்போது ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் அல்லது ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை அழைத்து கருத்து வெளியிடுவார் என தெரியவருகின்றது.

தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் நிலவரம் குறித்து இதன்போது அவர் கருத்து தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்த நிலையில், புதிய அமைச்சரவை ஒன்று இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இந்த நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் அடுத்த வாரம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅரிசியின் விலை அதிகரிப்பு குறித்து நுகர்வோர் தெரிவித்த கருத்து
Next articleமக்களின் ஆர்பாட்டங்களை பெரிதாக்க 10 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ள நிஷ்சங்க சேனாதிபதி