பதவி விலக இருந்த மஹிந்தவை தடுத்து நிறுத்திய அமைச்சர்கள்! 

பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்த முடிவு செய்து இருந்ததாகவும் இரண்டு அமைச்சர்கள் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 4 ஆம் திகதி அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்வதற்கு முன்னர் பிரதமருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் தனது முடிவை அறிவிக்கவிருந்தார்.

அப்போது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் பிரசன்ன ரணதுங்க உட்பட சிலர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டதை அடுத்து பிரதமர் தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.

பிரதமர் பதவியில் இருந்து விலகினால், தானும் அரசியலில் இருந்து விலக போவதாக பிரசன்ன ரணதுங்க கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து பிரதமர் பதவி விலகும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். இதன் பின்னர் பிரதமரை தவிர ஏனைய அனைவரும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

பதவி விலக இருந்த மஹிந்தவை தடுத்து நிறுத்திய அமைச்சர்கள்!
Previous articleராஜபக்ச குடும்பத்தை ஒருமையில் திட்டி தீர்த்த தேரர்
Next articleயாழ். எரிபொருள் நிலையத்தில் இடம்பெற்ற சம்பவம் – முதியவர் மரணம்