காதாலனால் கூரிய ஆயுதத்தால் தலை துண்டிக்கபட்டு பெண் கொலை

மெதிரிகிரிய – அம்பகஸ்வெவ பகுதியில் தனது காதலனால் கூரிய ஆயதமொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இந்த பெண் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள 22 வயதுடைய பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்று அம்பகஸ்வெவ பிரதேசத்தில் தலை மறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleஅரசாங்கம் தீர்வு தரும் வரை பொது மக்கள் அமைதியாக இருங்கள் – முத்தையா முரளிதரன்
Next articleகோட்டாபயவிற்கு ஆர்ப்பாட்டத்தில் ஆதரவாக பேசிய பிரபல பாடகி விரட்டியடிப்பு