யாழில் இடம்பெற்ற விபத்தில் தாய் கண்முன்னே உயிரிழந்த மகன்

யாழ்.நகர் பகுதியில் பாரவூர்தி, மோட்டார் சைக்கிளில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் சத்திர சந்தி பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து தெரியவருகையில்,

தாயும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை பின்னால் சென்ற பாரவூர்தி மோதியதில், மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து பயணித்த சிறுவன் , வீதியில் விழுந்து பாரவூர்தியின் சக்கரத்திற்குள் சிக்கி ஸ்தலத்திலையே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் அறிந்து யாழ்ப்பாண பொலிஸார் , சம்பவ இடத்திற்கு விரைந்து , பாரவூர்தி சாரதியை கைது செய்துள்ளனர்.

அத்துடன் , பாரவூர்தியையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் சென்று மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleகோட்டாபயவிற்கு ஆர்ப்பாட்டத்தில் ஆதரவாக பேசிய பிரபல பாடகி விரட்டியடிப்பு
Next articleஎனக்கும் ஜனாதிபதிக்கும் இராஜிநாமா செய்வது கடினம் அல்ல – மஹிந்த ராஜபக்ச