எரிபொருள் விநியோகத்தில் இனி இவ்வாறான நடைமுறைகள் தடை !

கேன்கள் மற்றும் பீப்பாய்களுக்கான எரிபொருள் விநியோகத்தை இன்று (12) முதல் நிறுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தீர்மானித்துள்ளது.

விவசாய நடவடிக்கைகளுக்கு எரிபொருள் தேவைப்படுமாயின் சம்பந்தப்பட்ட விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் பிரதேச கமநல உத்தியோகத்தரின் அனுமதி வழங்கப்பட்டால் அதனை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், வேறு தேவைகளுக்காக பீப்பாய்களில் எரிபொருள் தேவைப்படுமாயின் பொதுமக்கள் பிரதேச செயலாளரிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்து.

ஆனால், மண்ணெண்ணெய் கேன்களில் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்திற்கான தேவையான எரிபொருள் இருப்புக்கள் பெறப்பட்டுள்ளன எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.